வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

20ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு

20ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது

இந்தநிலையில் வருகிற 20ந்தேதி முதல் இரவு 10 மணி வரை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஏப்ரல் 20ந்தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கின் போது தனியார் பொது போக்குவரத்து ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை

மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்படும். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ஒதிவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

 

297 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன