புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

மீண்டும் நடிக்க வந்த மீரா ஜாஸ்மின் ஜெயராமுக்கு ஜோடியானார்!

மீண்டும் நடிக்க வந்த  மீரா ஜாஸ்மின் ஜெயராமுக்கு ஜோடியானார்!

லிங்குசாமி இயக்கத்தில் 2002-ம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின்

தமிழில் கடைசியாக விஞ்ஞானி, இங்க என்ன சொல்லுது ஆகிய படங்களில் நடித்திருந்த இவர் 2014-ம் ஆண்டு துபாயில் பணியாற்றும் அனில் ஜான் என்ற பொறியாளரை திருமணம் செய்து கொண்டார். அத்ன் பின்னர் ஒரு சில மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்த மீரா ஜாஸ்மின் 2018-ம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக திரைப்படங்களில் எதுவும் நடிக்கவில்லை.

இந்நிலையில் பிரபல மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்க மீரா ஜாஸ்மின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜூலை மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு இறுதியில் ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.

2004-ம் ஆண்டு  சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கும் மீரா ஜாஸ்மின், கேரளா, தமிழ்நாடு அரசின் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழக அரசு 2009-ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. இதுதவிர ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிக்க வருவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது

343 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன