வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

தீடிரென்ற கடலில் லேண்ட் ஆன விமானம்!

தீடிரென்ற கடலில் லேண்ட் ஆன விமானம்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் cocoa கடற்கரையில் நடைபெற்ற ஏர்ஷோ நிகழ்ச்சியில் விமானம் ஒன்று பழுதடைந்தால் விமானி விமானத்தை அவசரமாக கடலில் தரையிறக்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது .

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் cocoa கடற்கரையில் ஏர்ஷோ எனப்படும் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், TBM Avenger என்ற ஒற்றை என்ஜின் விமானமும் பங்கேற்றது. வானில் பறந்து கொண்டிருந்த TBM Avenger விமானத்தில் தீடிரென்று இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், துரிதமாக செயல்பட்ட விமானி விமானத்தை தரையிறக்க முடிவு செய்து கடற்கரை ஓரம் ஆழம் இல்லாத இடத்தில், அதேசமயம் மக்கள் இல்லாத இடத்தில் மிக துல்லியமாக விமானத்தை தரை இறங்கியுள்ளார்.

கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் இந்த காட்சியை கண்டு ஆச்சர்யமும், அச்சமும் அடைந்தனர். விமானம் கடற்கரையில் தரையிறக்கப்பட்ட சில வினாடிகளிலேயே மக்கள் விமானத்தை நோக்கி நீச்சல் அடித்தபடி விமானிக்கு உதவ சென்றனர்.

296 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன