செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 15
Shadow

தனுஷின் ‘கர்ணன்’ தெலுங்கில் ரீமேக் ஆகிறது…. நடிக்கப்போவது யார் தெரியுமா?!

தனுஷின் ‘கர்ணன்’ தெலுங்கில் ரீமேக் ஆகிறது…. நடிக்கப்போவது யார் தெரியுமா?!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் கடந்த 9-ந் தேதி வெளியானது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கர்ணன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ், கர்ணன் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார். மேலும் இவரது மகனான பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், தான் தனுஷ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது முடிவாகவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், இதுவரை 8 படங்களில் நடித்துள்ளார். அதில் ‘சுந்தரபாண்டியன்’, ‘ராட்சசன்’ போன்ற தமிழ் படங்களின் ரீமேக்கும் அடங்கும்.
ஏற்கனவே நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றி பெற்ற அசுரன் படமும் தற்போது தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடித்துள்ளார். இப்படத்தை மே 14-ந் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவல் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன