
பிப்ரவரி 17-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட ‘சிவகார்த்திகேயன் – பொன்.ராம்’ படக்குழு முடிவு செய்திருக்கிறது.
‘வேலைக்காரன்’ படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதைத் தொடர்ந்து, பொன்.ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வருகிறது.
தற்போது மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனோடு நடித்து வருகிறார்கள். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் பிறந்த நாளான பிப்ரவரி 17-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதுவரை 55% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.
மேலும், ஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ டிசம்பர் 22-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது
