ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

ஒரு கட் கூட இல்லாமல் சென்சார் வாங்கிய பத்மாவதி படம்…

 

ஒரு கட் கூட இல்லாமல் சென்சார் வாங்கிய பத்மாவதி படம்… இதை படித்ததும் அதிர்ச்சியாக இருக்கும். நாடு முழுதும் கடும் எதிர்ப்பு. தீபிகா படுகோன் தலைக்கு 10 கோடி பரிசு என பல சர்ர்ச்சைகளில் சிக்கியுள்ள பத்மாவதி படத்துக்கு பிரிட்டிஷ் சென்சார் போர்டு ஒரு கட் கூட கொடுக்காமல் ரிலீஸ் செய்ய அனுமதி அளித்து இருக்கிறார்கள்.

பத்மாவதி படத்துக்கு பிரிட்டிஷ் சென்சார் போர்டு வழங்கியிருக்க சர்டிஃபிகேட் என்ன தெரியுமா?
பத்மாவதி படத்தை பிரிட்டனில் ரிலிஸ் செய்ய அந்நாட்டு சென்சார் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. இயக்குநர் சஞ்சய் பன்சாலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பத்மாவதி.

190 கோடி ரூபாய் செலவில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் உருவாகியிருக்கிறது பத்மாவதி படம். ராஜ புத்திர இனத்தின் ராணியான பத்மாவதியை கொச்சைப்படுத்தும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறி ராஜ புத்திரர் இனத்தவர்களும் இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சாலைமறியல் கொடும்பாவி எரிப்பு என பல்வேறு போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடரும் சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளால் சென்சார் போர்டும் இன்னும் சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் அறிவித்தபடி வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி படம் ரிலிஸாவது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் பிரிட்டனில் படத்தை ரிலிஸ் செய்ய அந்நாட்டு சென்சார் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. பிரிட்டன் சென்சார் போர்டு 12ஏ என்ற ரேட்டிங் சான்றிதழை வழங்கியுள்ளது.


படத்தின் எந்த இடத்திலும் பிரிட்டன் சென்சார் போர்டு கத்தரிபோடவில்லை. கொடுத்ததை கொடுத்தப்படியே 12 ஏ ரேட்டிங் சான்றிதழுடன் வெளியிட அனுமதி வழங்கியுள்ளனர்.

 

222 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன