
‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் தன்னுடைய 58-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் எப்போது தொடங்கும், யார் யார் நடிக்கின்றனர் என்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் அஜித்தின் 58-வது படத்தின் பெயர் ‘விசுவாசம்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதோடு படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘விசுவாசம்’ மூலம் 4வது முறையாக கூட்டணி ஆகும் சிவா-அஜித். இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
325 Views
