வியாழக்கிழமை, மே 16
Shadow

ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் நடிகர்!

ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் நடிகர்!

இரண்டு பெயர் கொண்ட நடிகரின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கிறதாம். அவர் நடிக்கும் படமெல்லாம் ஹிட்டாகி வருவதால், இதுவரை ஒரு படத்துக்கு இத்தனை கோடி என டீல் பேசி வந்தவர், தற்போது ஒரு நாளைக்கு ஒரு கோடி தர வேண்டும் என்று தடாலடியாக அறிவித்துவிட்டாராம்.
சீப் அண்ட் பெஸ்டாக இருந்த அந்த நடிகர், இப்போ காஸ்ட்லியாகி விட்டதால் தயாரிப்பாளர்கள் வேறு நடிகர்களை நாடத் தொடங்கிவிட்டார்களாம். இதனால் தனது மார்க்கெட் பாதிக்கப்படுமே என அந்த நடிகர் துளியும் கவலைப்பட வில்லையாம். நான் கேட்ட சம்பளத்தை கொடுக்க ரெடினா வாங்க, இல்லைனா போய்கிட்டே இருங்க என கறாராக பேசி அனுப்பி விடுகிறாராம்.
185 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன