ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

மகேஷ்பாபுக்கு வில்லனாகும் அர்ஜுன்!

மகேஷ்பாபுக்கு வில்லனாகும் அர்ஜுன்!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு தற்போது பரசுராம் பெட்லா இயக்கும் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை துபாயில் நடத்தி முடித்த படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்பை கொரோனா பரவல் குறைந்த பின் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவந்தது. இதில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜுனுக்கு இப்படத்தின் கதை மிகவும் பிடித்திருப்பதாகவும், கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் மகேஷ் பாபு – அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
327 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன