வெள்ளிக்கிழமை, மே 1
Shadow

Tag: arjun

குருநாதர் அர்ஜுனுடன் இணைந்து துப்பறிவாளன்-2 மூலம் இயக்குனர் ஆகிறார் விஷால்!

குருநாதர் அர்ஜுனுடன் இணைந்து துப்பறிவாளன்-2 மூலம் இயக்குனர் ஆகிறார் விஷால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *குருநாதர் அர்ஜுனுடன் இணைந்து துப்பறிவாளன்-2 மூலம் இயக்குனர் ஆகிறார் விஷால்!* விஷால் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியாகிய துப்பறிவாளன் முதல் பாகம் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை விஷால் அவர்கள் நடித்து இயக்குகிறார். நடிகர் மற்றும் இயக்குனர் அர்ஜூன் அவர்களிடம் உதவி இயக்குனராக விஷால் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் தென்னிந்திய மொழிகளில் இருந்து நடிகர், நடிகைகள் பலர் இணைகிறார்கள், இத்திரைப்படத்தின் மூலம் விஷால் இயக்குனராக அவதரிப்பதால் இத்திரைப்படத்தின் கதையை பான் இந்திய திரைப்படமாக சிறப்பாக வடிவமைத்து வருகிறார். குருவான அர்ஜுனுடன் இணைந்து துப்பறிவாளான் 2 உருவாக்குக்கிறார் விஷால். விஷால் - அர்ஜுன் இணையும் படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது....
விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்!

விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தி நடிகர் சஞ்சய்தத், ...
மகேஷ்பாபுக்கு வில்லனாகும் அர்ஜுன்!

மகேஷ்பாபுக்கு வில்லனாகும் அர்ஜுன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மகேஷ்பாபுக்கு வில்லனாகும் அர்ஜுன்! தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு தற்போது பரசுராம் பெட்லா இயக்கும் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை துபாயில் நடத்தி முடித்த படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்பை கொரோனா பரவல் குறைந்த பின் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவந்தது. இதில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜுனுக்கு இப்படத்தின் கதை மிகவும் பிடித்திருப்பதாகவும், கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது. இப...
பொய் சொன்ன  மீடூ ஸ்ருதி…  அர்ஜுன் ரசிகர்கள் கோபம்!

பொய் சொன்ன மீடூ ஸ்ருதி… அர்ஜுன் ரசிகர்கள் கோபம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  நிபுணன் படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இரவு விருந்துக்கு அழைத்ததாகவும் நடிகை ஸ்ருதி ஹரிகரன் பரபரப்பு புகார் கூறினார். மீடூ இயக்கம் மூலம் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அர்ஜுன் ஸ்ருதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இருவரும் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்துள்ளனர். ஸ்ருதி போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் தான் திருமணமானவர் என்றும் கணவர் பெயர் ராம்குமார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் ஸ்ருதி தான் திருமணமானவர் என்று இதுவரை வெளிப்படுத்தியதே இல்லை. ஸ்ருதிக்கு திருமணம் முடிந்துவிட்டதாக கடந்த ஆண்டே ஊடகங்களில் செய்தி வந்தது. ஆனால் ஸ்ருதி அதை மறுத்து வந்தார். போலீசில் புகார் செய்ததன் மூலம் ஸ்ருதி ரகசி...