வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 18
Shadow

தமிழகத்திற்கு நாளை முதல் கூடுதல் தடுப்பூசிகள் வருகை!

தமிழகத்திற்கு நாளை முதல் கூடுதல் தடுப்பூசிகள் வருகை!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ரூ.39.05 கோடி செலவில் தடுப்பூசிகளை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது.
இதனால், தமிழகத்திற்கு நாளை முதல் கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளன.
இந்த மாத இறுதிக்குள் 42.58 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளன. நாளை 63,370 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், நாளை மறுநாள் 40,000 கோவாக்சின் தடுப்பூசிகளும் வர உள்ளன.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குள் தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன