புதன்கிழமை, மே 15
Shadow

Tag: கொரோனா தடுப்பூசி

கொரோனா 3-ம் அலை பாதிப்பு ஒரே வாரத்தில் 45 சதவீதம் குறைந்தது!

கொரோனா 3-ம் அலை பாதிப்பு ஒரே வாரத்தில் 45 சதவீதம் குறைந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனாவின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் வைரஸ் பரவலால் கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து இந்தியாவில் தினசரி பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியது. தினசரி பாதிப்பு 6 ஆயிரத்தில் இருந்து நாள்தோறும் படுவேகமாக உயர்ந்தது. முதல் 2 அலைகளை விட 6 மடங்கு வேகத்தில் தினசரி பாதிப்பு அதிகரித்ததால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரம் நாடு முழுவதும் மக்களுக்கு 160 கோடி டோசுக்கும் மேல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்ததால் உயிரிழப்புகள் குறைவாகவே இருந்தது. மேலும் நோயின் தீவிரமும் குறைவாகவே காணப்பட்டதால் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலேயே குணம் அடைந்தனர். இதனால் 3-ம் அலை குறுகிய காலத்தில் உச்சம் அடைந்தது. கடந்த மாதம் 21-ந்தேதி 3.47 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளானதே இந்த அலையின் உச்சமாக சுகாதாரத்துறையினர் அறிவித்தனர். அதன் பிறகு தினசரி பாதிப்பு நாள்...
சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி – ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம்!

சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி – ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி - ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம்! ஆஸ்திரேலியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,465,811 உயர்ந்துள்ளது. கொரோனா தொடங்கியதிலிருந்து அந்நாட்டில் மொத்தம் 3,465 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது பல நாடுகளில் காணப்படும் இறப்பு விகிதத்தை விட மிகக் குறைவு.  இந்நிலையில் 16 மற்றும் 17 வயதுடைய சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய மருத்துக் கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டனில் சிறார்களுக்க பூஸ்டராகப் பயன்படுத்தப்படும்  ஃபைசரின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியாவிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா மூன்றாவது அலையை தடுக்க மக்கள் பூஸ்டர் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில...
தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்!

தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்! இந்தியாவிலேயே முதல்முறையாக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் 40 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என பல இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. 2-வது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள், இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் மூலமாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது....
சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் 65 கோடி தடுப்பூசிகள் பெற மத்திய அரசு ஒப்பந்தம்!

சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் 65 கோடி தடுப்பூசிகள் பெற மத்திய அரசு ஒப்பந்தம்!

HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் 65 கோடி தடுப்பூசிகள் பெற மத்திய அரசு ஒப்பந்தம்! நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா முதல் அலை பரவலின்போது ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமாகவே கொரோனா பாதிப்பு குறைந்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. சமீபத்தில் ரஷியா நிறுவனம் தயாரித்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை சில தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்து கட்டணம் அடிப்படையில் பொதுமக...
கர்ப்பிணிகள் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்!

கர்ப்பிணிகள் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கர்ப்பிணிகள் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்! நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்படாமல் இருந்தது. கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது என நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, மத்திய சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய சுகாதாரத்துறை, கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என இன்று ஒப்புதல் அளித்துள்ளது. கர்ப்பிணி...
மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது, தமிழகத்திற்கான  கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும். மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் அரசு மருத்துவமனைகளுக்கான உள்ஒதுக்கீட்டை 90 சதவீதமாக உயர்த்த வேண்டும். மாநிலங்களுக்கு இதுவரை ஒதுக்கப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கையை ஆய்வு செய்ய வேண்டும். குறைந்த அளவு தடுப்பூசி வழங்கப்பட்ட மாநிலங்களுக்கு நிலுவை தடுப்பூசியை விரைந்து வழங்க வேண்டும்....
50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் – ஜோ பைடன்!

50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் – ஜோ பைடன்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் - ஜோ பைடன்! 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி 92 நாடுகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக, வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: அமெரிக்கா 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி அதை குறைந்த மற்றும் நடுத்தரத்துக்கும் குறைவான வருவாய் உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் என 92 நாடுகளுக்கு வழங்க உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மூலம் பல மில்லியன் நபர்களின் உயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்துள்ளார்....
தமிழகத்திற்கு நாளை முதல் கூடுதல் தடுப்பூசிகள் வருகை!

தமிழகத்திற்கு நாளை முதல் கூடுதல் தடுப்பூசிகள் வருகை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்திற்கு நாளை முதல் கூடுதல் தடுப்பூசிகள் வருகை! தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ரூ.39.05 கோடி செலவில் தடுப்பூசிகளை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு நாளை முதல் கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளன. இந்த மாத இறுதிக்குள் 42.58 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளன. நாளை 63,370 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், நாளை மறுநாள் 40,000 கோவாக்சின் தடுப்பூசிகளும் வர உள்ளன. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குள் தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
முழு ஊரடங்கு நீடிக்குமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

முழு ஊரடங்கு நீடிக்குமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முழு ஊரடங்கு நீடிக்குமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்! காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- ஊரகப்பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளன. கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா குறித்த விழிப்புணர்வு முழு அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு. எவ்வித தளர்வும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதன் பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் முழு ஊரடங்கின் பலன் மேலும் தெரிய ஆரம்பிக்கும். தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம்.  கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கைகளும் தற்போது போதுமான அளவில் உள்ளன. 18 முதல...
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா!

CINI NEWS, helth tips, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா! தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்நிலையில், நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....