திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

கர்ப்பிணிகள் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்!

கர்ப்பிணிகள் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்!

நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்படாமல் இருந்தது.
கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானது என நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, மத்திய சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய சுகாதாரத்துறை, கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என இன்று ஒப்புதல் அளித்துள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், ‘கோவின்’ வலைத்தளத்தில் பதிவு செய்தோ அல்லது அருகிலுள்ள தடுப்பூசி மையத்திற்கு நேரடியாக சென்றோ தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் முன்களப் பணியாளர்களக்கான கவுன்சிலிங் கிட் மற்றும் பொதுமக்களுக்கான தகவல் கையேடு ஆகியவை மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. இது தடுப்பூசி திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும்.
159 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன