வியாழக்கிழமை, மே 21
Shadow

என் மகள்களால் எனக்கு பெருமை கிடைத்திருக்கிறது – பிரபல இந்திப் பட டைரக்டர் மகேஷ் பட்

 

பிரபல இந்திப் பட டைரக்டர் மகேஷ் பட், தனது வாரிசுகளான இரண்டு இளம் நடிகைகளை களத்தில் இறக்கி விட்டிருக்கிறார். மூத்தவரான ஆலியா பட் ஏற்கனவே முன்னணி இடத்தை பிடித்திருக்க, சகோதரி ஷஹீன் பட் திரை உலகில் முன்னுக்கு வர அதிவேகம் காட்டிக்கொண்டிருக்கிறார். பிசியாக இருக்கும் இவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் சந்திக்கவைத்தபோது குடும்பத்தை பற்றிய ருசிகரமான பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்கள்.

ஆலியா பட்: நாங்கள் மூவரும் சேர்ந்து இருப்பது போன்ற போட்டோ உள்ளபடியே ரொம்ப அழகானது. நாங்கள் மூவரும் ஒரே துறையிலிருந்தாலும் இதுவரை நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டதில்லை. இந்த போட்டோ எங்களை இணைத்திருக்கிறது.

மகேஷ் பட்: என் மகள்களால் எனக்கு பெருமை கிடைத்திருக்கிறது. தன்னைவிட தன் குழந்தைகள் புகழ் பெறவேண்டும் என்று தான் எல்லா அப்பாக்களும் விரும்புவார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். என் ஆசை நிறைவேறிவிட்டது.

ஷஹீன்: இந்தக் குடும்பத்தில் பிறந்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். தந்தையும், சகோதரியும் எனக்கு பக்கபலமாக இருந்து என்னை உயர்த்தி விட்டிருக்கிறார்கள். குடும்பத்தோடு நாங்கள் சேர்ந்திருக்கும் நேரத்தில் எங்கள் வீட்டில் ஆனந்தம் விளையாடும்.

416 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன