வியாழக்கிழமை, ஆகஸ்ட் 5
Shadow

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு- அடையாறு போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு- அடையாறு போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி பல முறை கருகலைப்பு செய்ததாகவும் திரைப்பட நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.

போலீசார் கைது செய்வதற்கு முன்பு மணிகண்டன் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு கடந்த 16-ந்தேதி தள்ளுபடி செய்தது.

இதையடுத்து பெங்களூரு அருகே பதுங்கியிருந்த முன்னாள் அமைச்சரை கடந்த 20-ந்தேதி போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மணிகண்டனை வரும் ஜூலை 2-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, ஜாமின் மனு மீது வருகிற 24-ந்தேதிக்குள் பதிலளிக்குமாறு அடையாறு அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

61 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

13 − eight =