வியாழக்கிழமை, செப்டம்பர் 3
Shadow

நடிகை ஹீனா பாஞ்சல் போதைப்பொருள் வழக்கில் கைது

நடிகை ஹீனா பாஞ்சல் போதைப்பொருள் வழக்கில் கைது

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி மலை அருகே உள்ள சொகுசு பங்களாவில் ரகசியமாக போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த பங்களாவில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு அனுமதியின்றி பார்ட்டி நடத்தப்பட்டதும், போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது. அதில் கலந்து கொண்ட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 12 பெண்கள் அதில் ஈரானிய பெண்ணும் ஒருவர். மேலும் பாலிவுட், தென்னிந்திய சினிமா பெண்கள் அடங்குவர்

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் நடிகை ஹீனா பாஞ்சலும் ஒருவர். பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர், தமிழில் யாகாவாராயினும் நாகாக்க, கன்னட படமான லொட்டு, தெலுங்கில் மல்லிபு போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.
இதுதவிர மராட்டிய  பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பிரபலமானார். நடிகை ஹீனா பாஞ்சல் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
323 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன