
தயாரிப்பாளர்: ஆக்ஷன் கதையெல்லாம் வேணாம்பா… த்ரில்லிங்கா பிராடு பன்ற கதை…
கிளைமாக்ஸ்ல ஆடியன்சோட சேர்ந்து தியேட்டர்காரனும் ஷாக் ஆகனும்’
அப்படி ஏதாவது கதையிருந்தா இருந்தா சொல்லு
வாய்ப்பு தேடுபவர்: சார் இது ஆக்ஷன் கதைன்னு சொல்ல முடியாது…
ஆனா ஆக்ஷன் இருக்கும்சார்… த்ரில்லர் கதைன்னு
சொல்ல முடியாது ஆனா த்ரில்லர் இருக்கும் சார்…
கிளைமாக்ஸ் பயங்கர ஷாக்கா இருக்கும்சார்…
தயாரிப்பாளர்: பில்டப் எல்லாம் போதும்பா… கதைய சொல்லு…
நம்ம கதையோட ஹீரோ யார்னு கேட்டீங்கன்னா
ஜல் ஜல்னு சத்தம் வரும் சலங்கைதான்… சார்…
சிறுத்தை புலி பூனை சிங்கம், நரின்னு மிருகங்கள்
வாழுற காடு தான் நம்ம படத்தோட லொகேஷன்….
ஒருநாள் சிங்கம் இரைதேட போகும்போது
பெருசா ஒண்ணும் கிடைக்காம தவிச்சுது…
இரைதேடப்போன சிங்கத்தை காணோம்னு
அதோட குகையில குட்டி சிங்கங்களும்,
வாசல்ல பல நரிகளும் காத்துகிடந்தது…
ஆனா இரை தேடப்போன சிங்கத்துக்கு இரை கிடைக்காம
பசி மயக்கத்துல சிங்கம் படுத்துகிடந்துச்சி…
அந்த நேரம்பாத்து அந்த பக்கமா எப்பவுமே கண் வைச்சி
சுத்திகிட்டிருக்கிற வேட்டைக்காரன் பார்வையில
படுத்துகிடக்கிற சிங்கம் சிக்கிடுச்சி…
வேட்டைக்காரனுக்கு ஒரு டவுட்டு சிங்கம் சும்மா படுத்துகிடக்கா இல்ல
மயங்கி கிடக்கான்னு மெல்ல கிட்டப்போயி பாத்தா நெசமாவே சிங்கம்
இரை கிடைக்காம பசி மயக்கத்துல இருந்துச்சி…
என்னதான் வேட்டைக்காரன் மிருகங்களை
வேட்டையாடும் மனுசனா இருந்தாலும்
பசிமயக்கத்துல இருக்குற சிங்கம் மேல
பரிதாபப்பட்டு மனசு இறங்கி
தான் வைச்சிருந்த தண்ணீயையும்,
வேட்டையாடி வைச்சிருந்த இறைச்சியையும் கொடுத்தான்…
சிங்கமும் அப்போதைக்கு பசியாறி தெம்பாயி மிச்சம் மீதி உணவை எல்லாம்
எடுத்துகிட்டு குகைக்கு போய் குட்டிகளுக்கும் கொடுத்துச்சி…
அப்படி சிங்கத்துக்கு உணவு கொடுக்குறதுக்கு
வேட்டைக்காரன் தான் எப்பவும் செய்யுறமாதிரி
எப்படியிருந்தாலும் இது மனுசனை வேட்டையாடுகிற கொடிய மிருகம்…
இப்ப பசி மயக்கத்துல இருக்குறதால நாம கிட்ட வந்திருக்கோம்.
பசி தீர்ந்து சிங்கம் தெம்பாயிட்டா உதவி செய்த நம்மளையும்
அடிச்சி கொன்னாலும் கொன்னுடும்னு யோசிச்சி…
சிங்கம் பசி மயக்கத்துல இருக்கும்போதே
அதோட கால்ல சிங்கத்து கால்ல
ஒரு சலங்கையை கட்டி விட்டுட்டான்.
அந்த சலங்கையை கட்டும்போது சிங்கத்துகிட்ட
‘நீ எப்ப எங்க வந்தாலும் இந்த சலக்கை சத்தத்தை
வைச்சி உனக்கு தேவையான எல்லாதையும்
நானே பன்னிடுறேன்னு’ வேட்டைக்காரன் சொன்னதால சிங்கராஜா
ரொம்ப அலட்டிக்காம வேட்டைக்கும் போகாம
வேட்டைக்காரனை நம்பியே காலத்தை ஓட்டிகிட்டிருந்துச்சி…
கொஞ்ச நாள்ள வேட்டைக்காரனும் சிங்கமும் ரொம்ப பழக்கமாயிட்டாங்க…
சிங்கம் எப்ப வந்தாலும் வரும் போது கேக்குற சலங்கை சத்தத்தை வைச்சி
வேட்டைக்காரன் சிங்கம் வர்றதை கண்டுபுடிச்சிக்குவாரு…
இவங்க ரெண்டு பேருக்கு மட்டுமே தெரிஞ்ச இந்த சலங்கை
சத்த மேட்டரு காடு பூரா
ஒரு கட்டத்துல தெரிஞ்சி போச்சி…
அதே காட்டுக்குள்ள இருந்த மத்த பல மிருகங்களுக்கு ஒரே டவுட்டு இந்த
சிங்கராஜா வேட்டைக்கே போகாம நோகாம
நொங்கு திங்குறது எப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சிதுங்க…
அப்பத்தான் சிங்கராஜா வரும்போது கேட்ட
சலங்கை சத்தம் மத்த மிருகங்களுக்கும் கேட்க…
விஷயம் இதானானான்னு தெரிஞ்சிகிட்டு
வேட்டைக்காரனோட சினேகமாக… அந்த காட்டுல
இருக்குற பெரும்பாலான மிருகங்கள் கால்ல
வேட்டைக்காரனோட சலங்கையை மாட்டிகிச்சிங்க…
ஆரம்பத்துல கால்ல இருந்த சலங்கை சத்தம்
இன்னிசையா மிருகங்கள் காதுல ஒலிக்க ஆரம்பிச்சிது…
ஒரு கட்டத்துல ரகசியமா எங்கயாவது மிருகங்கள்
ஒதுங்க நினைச்சாலும் சலங்கை சத்தம் அதுகளை காட்டிக் கொடுக்க…
சுதந்திரம் பறிபோயிடுச்சோன்னு சில மிருகங்கள் பதற ஆரம்பிச்சிடுச்சி…
வலிமையான பல மிருகங்கள் கால் சலங்கை சத்தத்தை இன்னிசையாவே ரசிக்க…
காட்டுக்குள்ள வேட்டைக்காரனுக்கு ஆதரவா ஒரு கூட்டமும்,
எதிரா ஒரு கூட்டமும் சத்தமில்லாம அணி சேர்ந்துடுச்சிங்க…
அந்த நேரம்பாத்துதான் காட்டுல தேர்தல் வர
யானை ஒட்டகமெல்லாம் ஒரு பக்கமும்
பூனை தொடங்கி சிறுத்தை சிங்கமெல்லாம்
ஒரு அணியாவும் களத்துல இறங்க…
வேட்டைக்காரனுக்கும் ரொம்ப நாளா அந்த காட்டுக்கு
நாமளும் ராஜாவா இருக்கனும்னு மனசுல ஒரு ஆசை…
மிருகங்கள் மட்டுமே காட்டு தேர்தல்ல நிக்கமுடியும்னு
சொன்னதால வேட்டைக்காரன் தேர்தல் நேரத்துல
சிங்கத்துக்கும் அவுங்க மிருக நண்பர்களுக்கும் பெருசா உதவி எல்லாம் பண்ண
சிங்கராஜா டீம் தேர்தல்ல ஜெயிச்சி பதவியை புடிச்சிட்டாங்க…
உதவி செஞ்ச வேட்டைக்காரனை காட்டை விட்டே
விரட்டலாம்னு பதவி வந்ததும் சிங்கராஜா திட்டம்போட…
அதுக்கு கூட்டணி சேர்த்துகிட்டு வேட்டைக்காரன்கிட்டயிருந்து
காட்டை மீட்டெடுக்குறேன்னு
கர்ஜனை செய்த சிங்கராஜா அடிக்கடி
ரகசிய கூட்டம் போட திட்டம் போட்டாலும்
கால்ல இருக்கும் சலங்கை சத்தம்
காட்டிக்குடுக்குறதால அதுல இருந்து
எப்படி வெளிய வரலாம்னு ரொம்ப
ஞானமா அந்த ராஜா யோசிக்க ஆரம்பிச்சாரு…
அப்படி யோச்சித்தால கொஞ்ச நாள் வெளிய
எங்கமும் போகாம குகையிலயே இருந்துச்சி….
வழக்கம்போல சலங்கை சத்தத்தை வைச்சி
சிங்கராஜா வர்றதை கண்டுபிடிக்கும் வேட்டைக்காரனுக்கு
இந்த விவரம் தெரியவர…
சிங்கத்தை காணோம்னு காடு பூரா வேட்டைக்காரன் தேட ஆரம்பிச்சான்…
வேட்டைக்காரன் தேட ஆரம்பிச்சதை தெரிஞ்சிகிட்ட
சிங்கராஜா தன்னோட குகையிலயிருந்து வேற குகைக்கு
ஓடிப்போயிடலாம்னு முயற்சிக்கும்போது
கால் சலங்கை சத்தத்தை வைச்சி வேட்டைக்காரன்
அந்த சிங்கத்தை புடிச்சி கூண்டுல அடைக்க…
அதிர்ச்சி அடைஞ்ச சிங்கராஜா பதறிப்போயி…
எப்படியாவது கூண்டுலயிருந்து என்ன விடுதலை பண்ணிடுங்க
ஏற்கனவே பேசுனபடி எல்லாத்தையும்
தர்றேன்னு வேட்டைக்காரன்கிட்ட சமாதானம் பேசியிருக்கு…
வேட்டைக்காரனுக்கும் இந்த சிங்கம் போனாலும் பரவாயில்ல…
பல யானைகள்… ஒட்டகங்கள்… காண்டாமிருகங்கள்னு
காட்டுல வலிமையா இருக்குற
பல மிருகங்களை வளைச்சி சலங்கை கட்டி வைச்சிருக்கோம்…
அதை வைச்சி நம்ம காரியங்களை சாதிச்சிக்கலாம்னு
சிங்கத்தை ரிலீஸ் செய்ய சம்மதம் சொல்லியிருக்காரு…
கூண்டுல சிக்கியிருந்த சிங்கத்துக்கும் வேட்டைக்காரனுக்கும்
நடந்த இந்த சமரச பேச்சு கூண்டை
பாதுகாத்துகிட்டிருந்த வேட்டைக்காரனோட ஆளுங்களுக்கு தெரியல…
வேட்டைக்காரன் சொல்லிட்டாருன்னு சொல்லியும்
கூண்டை திறந்து ரிலீஸ் பண்ணாம
இருந்ததால சிங்கராஜா வேட்டைக்காரனோட
ஆளுங்களோட சண்டைக்கு போக…
அவுங்களோ… வேட்டைக்காரன் கிட்டயிருந்து எங்களுக்கு இன்னும் என்ஓசி வரல…
அது வரட்டும் கூண்டை திறந்து வுடுறோம்னு சொல்லிட்டு போயிட்டாங்க…
சிங்கராஜா மறுபடியும் மறுபடியும் ரொம்ப
கெஞ்சி கேட்டதால வேட்டைக்காரன் சிங்கராஜா
மேல வைச்சி நம்பிக்கையால அடைபட்ட
சிங்கத்தை ரிலீஸ் செய்துட்டு கால்ல மாட்டி வைச்சி
சலங்கையை கழட்டிக்க சாவியும் குடுத்துட்டு
மறக்காம சலங்கையையும் சாவியையும்
வந்து குடுத்துட்டு போயிடுன்னு சொல்லிட்டு போயிட்டா.
கூண்டில் இருந்து ரிலீஸ் ஆன சிங்கம் கால்ல
சலங்கையையும் கழற்றி சுதந்திரமானதால
அங்கயும் இங்கயும் ஓடிப்பாத்துச்சி…
முன்னாடி மாதிரி சத்தம்வரல… ரொம்ப குஷியான சிங்கராஜா
இந்த சலங்கையையும் சாவியையும் வேட்டைக்காரனுக்கு
குடுக்கனுமான்னு கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சிது…
அந்த நேரம் பாத்து அங்க வந்து நின்னுது மாயப்பூனை…
இந்த பூனைதான்
சிங்கம் கூண்டுல சிக்கியிருக்கும்போது அப்பப்போ
அதுக்கு சின்ன சின்ன உதவிகளை செய்தது…
அந்த பூனை அந்த நேரம் பாத்து அங்க வர…
சிங்கத்து கால்ல சலங்கை இல்லாம
சுதந்திரமா இருக்குறதை பாத்ததும் பூனைக்கும்
அதே மாதிரி தன் கால்ல இருக்குற சலங்கையை கழற்றி
சுதந்திரமாக ஓடியாட ஆசை வந்துடுச்சி…
அந்த ஆசைய சிங்கராஜாகிட்ட மாயப்பூனை சொல்ல…
பூனை காதுல சிங்கராஜா கிசுகிசுன்னு ஒருவிஷயத்தை சொல்ல…
அதை கேட்ட மாயப்பூனையோ…
‘ராஜா அண்ணே… நீங்க ஞானமா சொல்றீங்க…
எனக்கு அந்தளவுக்கு அறிவு பத்தாதுன்னா…
இது மட்டும் வேட்டைக்காரனுக்கு
தெரிஞ்சா நான் தொலைஞ்சேன்னு’ பதற…
அதுக்கு சிங்கராஜா…‘‘அடேய் மண்டு… நீ தனியா போனாதான சிக்குவ…
கூட நாலு நரிய சாட்சிக்கு கூட்டிகிட்டு போ… சலங்கையை குடு…
குடுத்த அடுத்த வினாடியே மாயவன் மாதிரி
விருட்டுனு அங்கயிருந்து ஓடி எஸ்கேப்
ஆகி காட்டுக்குள்ள ஒளிஞ்சிடு…
அதுக்கப்புறம் கேட்டா ஏற்கனவே பேசுனமாதிரி
சொல்லிக்கலாம்னு சிங்கராஜா ஐடியா குடுக்க…
சிங்கராஜாவும் மாயப்பூனையும் பேசிகிட்டிருக்கும்போதே…
அந்த நேரம்பாத்து வேட்டைக்காரன் ஆளுங்க
சலங்கையையும் சாவியையும் வந்து கேக்க…
பதறிப்போன சிங்கராஜா…. அதை வெளிய காட்டிக்காம
‘அண்ணே… நம்ம பூனைப்பய இருக்கானே….
அவன்கிட்ட உங்களுக்கு சேர வேண்டிய என்னோட
சலங்கையையும் சாவியையும் குடுத்து வுட்டிருக்கேன்…
வாங்கிக்கங்கன்னா…’ என்று பதில் சொல்லிவிட்டது சிங்கராஜா.
அதுக்குள்ள இங்கயும் அங்கயும் மாயவன் மாதிரி மறைஞ்சி மறைஞ்சி ஓடி
ஆட்டம்போட்டுகிட்டிருந்த பூனையும் வேட்டைக்காரன் இருக்குற இடத்துக்கே போயிடுச்சி…
வேட்டைக்காரனுக்கு சலங்கை சத்தம் கேட்டதும் வர்றது சிங்கராஜாவா பூனையான்னு
சின்னதா சந்தேகம் வந்தாலும் அதை காட்டிக்காம எட்டிப்பார்த்தா எதிர்ல மாயப்பூனை…
அது கையில சலங்கை சாவி…
சாட்சிக்கு சில நரிகளும் நிக்க…
வேட்டைக்காரன் எதையும் கேட்காம அந்த சலங்கையை வாங்கிட்டு பூனையை அனுப்பிவிட…
அப்பத்தான் வேட்டைக்காரன் கவனிச்சான்…
பூனை ஓடும்போது கால்ல சலங்கை சத்தமே வரல…
ஆனா அந்த சலங்கை பூட்டை திறக்குற என்ஓசி சாவி நம்மகிட்டதான இருக்குன்னு
பதறிப்போய் வீட்டுக்குள்ள போய் பாத்தா
பூனை கால்ல இருக்குற சலங்கைய திறக்குற சாவி அங்கயேதான் இருந்துச்சி…
திரும்ப வந்து பூனையை புடிக்க முயற்சிக்க அதுக்குள்ள
மாயப்பூனை சிட்டா ஓடி காட்டுக்குள்ள ஒளிஞ்சிடுச்சி…
அந்த நேரம்பாத்து காட்டுல ஒரு சோகம் நடந்துட…
இதுக்கெல்லாம் அந்த வேட்டைக்காரன்தான்
காரணம்னு சலங்கை
கட்டியிருக்கும் கட்டாம இருக்கும் பல மிருகங்கள் எல்லாம் திடீர்னு கூட்டம்போட…
பதறிப்போன வேட்டைக்காரன் தான் வைச்ச கன்னியில
தானே சிக்கிட்டமோன்னு காணாமபோயிட்டாரு…
காணாம ஓடினாலும் கடுப்பான வேட்டைக்காரன் சிங்கராஜாவுக்கு ஆள் அனுப்பி
‘எங்கடா என்னோட சலங்கையும், சாவியும்னு’ கேட்டா
‘என் சலங்கையை மாயப்பூனை உங்கிட்ட குடுத்துட்டானாமே…
அதுக்கு அப்புறமா என்ன ஏன் டார்ச்சர் பண்றீங்கன்னு’ சிங்கராஜா எஸ்கேப் ஆக…
மாயப்பூனையோ ‘ஐய்யய்யோ வேட்டைக்காரன்கிட்ட என் சலங்கையை குடுக்கும்போது நரிங்க
கூட சாட்சிக்கு இருந்தாங்களே அப்படியிருந்தும்
வேட்டைக்காரன் என்னை மட்டும் மிரட்டுனா எப்படின்னு’ சொல்லிட்டு திரிய…
வேட்டைக்காரனுக்கு ‘கரகாட்டக்காரன்’ கவுண்டமணியோட வாழப்பழ காமெடி’
நினைவுக்கு வர… படத்தை முடிக்கிறோம் சார்..!
தயாரிப்பாளர்: தம்பி கதை நல்லாயிருக்கு… கிளைமாக்ஸ் இன்னும் ஷாக்கா இருந்தா நல்லாயிருக்கும்…
கதை சொன்னவர்: சார்… இது கதைன்னு யார் சொன்னது… நிஜம்சார்… அத பார்ட் – 2ல சொல்றோம்…
ஒரு சினிமா பைனான்சியர் அவர் கிட்ட பணம் வாங்கின ஒரு இயக்குனரும் ஒரு தயாரிப்பாளரும்
வாங்குன பணத்தை எப்படி குடுக்காம சீட்டிங் பண்ணாங்கன்னு… இப்ப தமிழ் சினிமா இருக்குற
சூழல்ல இப்படி படம் வந்தா பாக்ஸ் ஆபீஸ் ரொம்பி வழியும்சார்…!
தயாரிப்பாளர்: ஏம்பா முத படம் மிருகங்களை வைச்சி காட்ல எடுத்துட்டு பார்ட் 2 நாட்ல எடுத்தா ஓடுமா…
கதை சொன்னவர்: சார்… முத பட கிளைமாக்ஸ்ல கல்யாணம் ஆகி கார்ல போற மாதிரி கதை எடுத்துட்டு
பார்ட் 2ல காதலர்கள் மாதிரி எடுக்குற கதையே ஓடுது….
நம்ம கம்பெனி காட்லயும் படம் எடுக்கும் நாட்லயும் படம் எடுக்கும்னு சோஷியல் மீடியாவுல மீம்ஸ் போடுறோம்…
அதை பாத்து பல விருதுகள் வரும் சார்…
