வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் பிரபல நடிகையின் மகள்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் பிரபல நடிகையின் மகள்!

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பானு. இவர் ஏராளமான மலையாள, தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘தாமிரபரணி’ படத்தில் அறிமுகமானார் நடிகை பானு. கடைசியாக தமிழில் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து 2015-ம் ஆண்டு நடிகை பானுவுக்கும் தொழிலதிபரான ரிங்கு டோமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு தற்போது கியாரா என்கிற மகளும் உள்ளார். அவ்வப்போது, தன்னுடைய மகளுடன் எடுத்து கொள்ளும்  புகைப்படங்கள் பானு சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், பானுவின் மகள் கியாரா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருக்கிறார். இயக்குனர் எம்.பத்மகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’பத்தாம் வளவு’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கியாரா நடித்து உள்ளார்.
705 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன