வியாழக்கிழமை, செப்டம்பர் 17
Shadow

மொட்டை தலையுடன் மாஸ் காட்டும் பகத் பாசில்!

மொட்டை தலையுடன் மாஸ் காட்டும் பகத் பாசில்!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
பகத் பாசிலின் வில்லன் போஸ்டர் இன்று வெளியானது. மொட்டை தலையுடன் மாஸாக இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்த படக்குழு, முதல் பாகத்தை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன