ஞாயிற்றுக்கிழமை, மே 12
Shadow

Tag: Pushpa

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் – இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம்

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் – இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *'குளோபல் ஸ்டார்' ராம்சரண்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் - இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.* புகழ் பெற்ற இயக்குநர் சுகுமாரும், 'குளோபல் ஸ்டார்' ராம்சரணும் காவிய பாணியிலான சினிமா முயற்சியில் இணையவுள்ளனர். எஸ். எஸ். ராஜமௌலியின் 'ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சுகுமாருடன் ராம் சரண் இணைந்திருப்பது.. நடிகரின் திரையுலக பயணத்தில் புதிய மைல்கல்லை குறிக்கிறது. 'ஆர் ஆர் ஆர்' படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டிற்கு பிறகு ராம்சரண் உலகளாவிய நட்சத்திரமாக உயர்ந்தபோது.. இயக்குநர் சுகுமார் அவரது இயக்கத்தில் வெளியான 'புஷ்பா' படத்தின் வெற்றியால் பெரும் புகழை பெற்றார். இவர்கள் இருவரும் இணையும் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெயரிடப்படாத இந்த திரைப...
படப்பிடிப்பை தொடங்கும் புஷ்பா படக்குழு!

படப்பிடிப்பை தொடங்கும் புஷ்பா படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கவுள்ளது. இதனை புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. https://twitter.com/MythriOfficial/status/1561315266255941633?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ct...
இணையத்தை கலக்கும் புஷ்பா மேக்கிங் வீடியோ!

இணையத்தை கலக்கும் புஷ்பா மேக்கிங் வீடியோ!

Uncategorized
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கிய திரைப்படம் புஷ்பா. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல் ரசிகர்கள் பலரின் முணுமுணுப்பாக மாறியது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனின் கதாப்பாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இந்நிலையில் புஷ்பா கதாப்பாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ அனைவராலும் பகிரப்பட்டு, அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அனைவராலும் பாராட்டப்பட்ட புஷ்பா எப்படி உருவாகிறான் என்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது....
“புஷ்பா” பாடலுக்கு நடனமாடும் வார்னர் மகள்கள்!

“புஷ்பா” பாடலுக்கு நடனமாடும் வார்னர் மகள்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, sports, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், விளையாட்டு செய்திகள்
  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் மகள்கள், தெலுங்கு படமான புஷ்பா திரைப்படத்தில் இடம்பிடித்த சாமி சாமி பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளனர். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் முரட்டு ரசிகரான டேவிட் வார்னர், அல்லு அர்ஜூன் நடிக்கும் படங்களின் காட்சிகளையும், பாடல்களையும் அப்படியே நடித்துக்காட்டி பலரின் பாராட்டுகளை பெற்றவராவார். இந்நிலையில் அண்மையில் வெளியான புஷ்பா திரைப்பட பாடலுக்கு வார்னர் நடனமாடினார்.   https://twitter.com/DuckBunnyHaters/status/1484470761771323394?s=20&t=loPKvHXFfZbVLqWrV6HTMg   இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் நிலையில் அவரின் மகள்கள் அதேபடத்தில் இடம்பிடித்துள்ள மற்றொரு பாடலுக்கு நடனமாடுவது வார்னரின் ரசிகர்களையும், தெலுங்கு திரைப்பட ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.   https://twitter.com/roronoa_...
வசூல் செல்ப் எடுக்காத பொங்கல் ரிலீஸ் படங்கள்… OTT ரிலீசுக்கு பிறகு மீண்டும் தியேட்டருக்கு வந்த “புஷ்பா”

வசூல் செல்ப் எடுக்காத பொங்கல் ரிலீஸ் படங்கள்… OTT ரிலீசுக்கு பிறகு மீண்டும் தியேட்டருக்கு வந்த “புஷ்பா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, கட்டுரை, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த ‘வலிமை’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் தள்ளிவைக்கப்பட்டது. பொங்கல் ரிலீஸ் வரை நல்ல வசூலில் இருத புஷ்பா படம் தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டு,  பொங்கல் புதுவரவாக ‘நாய் சேகர்’, ‘என்ன சொல்ல போகிறாய், ‘தேள்’ உள்ளிட்ட மீடியம் பட்ஜெட் படங்கள் திரையரங்கில் வெளியாகின.  பல படங்கள் ரிலீஸ் ஆனாலும்  இதில் எந்தப் படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. வசூலிலும் செல்ப் எடுக்கவே இல்லை. ஏற்கனவே கொரானா கட்டுப்பாடுகள் காரணமாக 50 சதவீத இருக்கை சிக்கல். இதன் காரணமாக தியேட்டர்காரர்களின் பார்வை மீண்டு புஷ்பா பக்கம் திரும்பியது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உலகமெங்கும் வெளியானது. ஃ...
வசூலைக் குவித்த ‘புஷ்பா’ சுகுமார் இயக்கத்தில் தனுஷ்?

வசூலைக் குவித்த ‘புஷ்பா’ சுகுமார் இயக்கத்தில் தனுஷ்?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ‘புஷ்பா’ இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்தனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடினார். ‘ரங்கஸ்தலம்’ வெற்றிக்குப் பிறகு சுகுமார் இயக்கிய படம், ஹிட் பாடல்கள், சர்ச்சைகள், கடைசி நேர இழுபறி எனப் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இப்படம் வெளியானது. சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படம் வெளியாகி இரண்டே நாட்களில், உலக அளவிலான பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.100 கோடி வசூலைக் குவித்தது. கரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து ‘புஷ்பா’ முதல் நாளில் ரூ...
‘புஷ்பா’ உள்ளிட்ட கேங்ஸ்டர் படங்களை பார்த்து கொலை குற்றத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்கள்

‘புஷ்பா’ உள்ளிட்ட கேங்ஸ்டர் படங்களை பார்த்து கொலை குற்றத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்கள்

HOME SLIDER, NEWS, செய்திகள்
அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தை பார்த்துவிட்டு, தாங்களும் குற்ற உலகில் பிரபலம் அடைய வேண்டும் என கருதி 3 சிறுவர்கள் ஒருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஜகாங்கீர்புரி பகுதி மருத்துவமனையில் ஷிபு என்ற நபர் கத்தி குத்து காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தபோதே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 3 சிறுவர்கள் சேர்ந்து ஷிபுவை கத்தியால் குத்தியது சிசிடிவி காணொளி மூலம் தெரிய வந்தது. அந்த சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, தாங்கள் புஷ்பா உள்ளிட்ட கேங்ஸ்டர் படங்களை பார்த்து, அதில் வரும் கதாபாத்திரங்களை போல ஆக வேண்டும் என விரும்பியதாகவும், இதனால் ஒருவரை கொலை செய்து அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிரபலம் அடைய இருந்ததாகவ...
அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தை பாராட்டிய கமல்!

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தை பாராட்டிய கமல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தை பாராட்டிய கமல்! சுகுமார் இயக்கியத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் நடித்து சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது. இப்படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘புஷ்பா’ படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியதாக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நேரம் ஒதுக்கி எங்களின் ‘புஷ்பா’ திரைப்படத்தைப் பார்த்த அன்புள்ள உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு மிக்க நன்றி. நீங்கள் மிகவும் இனிமையானவர். எங்கள் அனைவரது பணி குறித்தும் நீங்கள் கூறிய அன்பான வார்த்தைகளுக்கு நன்றி” என்று தெரிவித்து அதனுடன் சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்....
மொட்டை தலையுடன் மாஸ் காட்டும் பகத் பாசில்!

மொட்டை தலையுடன் மாஸ் காட்டும் பகத் பாசில்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மொட்டை தலையுடன் மாஸ் காட்டும் பகத் பாசில்! சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். பகத் பாசிலின் வில்லன் போஸ்டர் இன்று வெளியானது. மொட்டை தலையுடன் மாஸாக இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்த படக்குழு, முதல் பாகத்தை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
புஷ்பா படத்தின் ரிலீஸ் அப்டேட்!

புஷ்பா படத்தின் ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
புஷ்பா படத்தின் ரிலீஸ் அப்டேட்! சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....