ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

“புஷ்பா” பாடலுக்கு நடனமாடும் வார்னர் மகள்கள்!

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் மகள்கள், தெலுங்கு படமான புஷ்பா திரைப்படத்தில் இடம்பிடித்த சாமி சாமி பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளனர்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் முரட்டு ரசிகரான டேவிட் வார்னர், அல்லு அர்ஜூன் நடிக்கும் படங்களின் காட்சிகளையும், பாடல்களையும் அப்படியே நடித்துக்காட்டி பலரின் பாராட்டுகளை பெற்றவராவார்.

இந்நிலையில் அண்மையில் வெளியான புஷ்பா திரைப்பட பாடலுக்கு வார்னர் நடனமாடினார்.

 

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் நிலையில் அவரின் மகள்கள் அதேபடத்தில் இடம்பிடித்துள்ள மற்றொரு பாடலுக்கு நடனமாடுவது வார்னரின் ரசிகர்களையும், தெலுங்கு திரைப்பட ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

 

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட். குறிப்பாக ‘ஓ சொல்றியா மாமா..’ பாடல் அனைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், வெளியான இத்திரைப்படத்தின் உலகளவிலான தியேட்டர் வசூல் 300 கோடியை கடந்துவிட்டதாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன