சனிக்கிழமை, டிசம்பர் 9
Shadow

கோடியில் ஒருவன் கோடங்கி விமர்சனம்

 

விஜய் ஆண்டனி நடிப்பு வரலாற்றில் அம்மா செண்டிமெண்ட் படம்தான் அவருக்கான தனி இடத்தை தனி உயரத்தை அடையாளப்படுத்தியது.

அப்படி ஹிட் கொடுத்த அதே அம்மா செண்டிமெண்ட் கருவை கையில் எடுத்து மீண்டும் விஜய் ஆண்டனி கொடுத்யிருக்கும் படம்தான் கோடியில் ஒருவன்.

கிராமத்தில் இருக்கும்போது அம்மாவின் ஆசையான கலெக்டர் கனவை நனவாக்க சென்னைக்கு வரும் கதாநாயகன் சென்னையில் ஒரு நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியில் குடியேறுகிறார். அங்கே உள்ள மோசமான சூழலை பார்த்து அதை மாற்ற முயற்சி செய்ய வில்லன்களால் இடையூறு… இன்னொரு பக்கம் அம்மாவின் கனவான கலெக்டர் பதவி… இதில் எது சரியாக நடந்தது என்பதை புதுசாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா.

மக்களுக்கு நல்லது செய்ய கலெக்டர் ஆனால்தான் முடியுமா? என்ற கேள்விக்கும் புது பதில் இருக்கு.

முதல் பாதி கதையின் வேகம் இரண்டாம் பாதியில் சார்ஜ் இறங்கிப் போன பாட்டரி மாதிரி டல் அடிக்கிறது.

இனிமே கதை கேக்கும்போது கவுன்சிலர் ஆகுறதும், தேர்தல்ல நிக்குறதும், முதலமைச்சர் ஆகுறதும்னு யாராவது கதை எடுத்துகிட்டு வந்தா வாசலோட வெரட்டி விட்டுடுங்க விஜய் ஆண்டனி. அம்மா செண்டிமெண்ட் மட்டும் இதுல ஒர்க்கவுட் ஆகாம இருந்திருந்தா ரொம்ப கஷ்டம்.

ஆரம்பத்துல டெரரா வரும் வில்லன் கடைசியில் டம்மி பீசாகுறதும் ரொம்ப சினிமாத்தனம்.

ஹீரோயின் ஆத்மிகாவுக்கு பெருசா ஸ்கோப் இல்ல. நவாஸ் இசையில் புதுமை இல்லை.

மொத்தத்தில் கோடியில் ஒருவன் அம்மா செண்டிமெண்ட் காட்சிகளால் தப்பித்தான்!

– கோடங்கி

331 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன