புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது – கணவரை பிரிந்தார் சமந்தா!

திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது – கணவரை பிரிந்தார் சமந்தா!

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் அவர்கள் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து இருவரும் இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் வந்தனர்.

தற்போது சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், நாங்கள் இருவரும் கடந்த 10 வருடங்களாக நட்பாக பழகி வருகிறோம். இந்த நட்பு எங்கள் திருமணம் வரை சென்றது. தற்போது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்கள் முடிவுக்கு ரசிகர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் மதிப்பு கொடுக்கும் படி கேட்டுக் கொள்கிறோம் என்று பதிவு செய்து இருக்கிறார்கள்.

652 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன