
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
முதல்கட்டமாக 89 தொகுதிகளில் இன்றுகாலை வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பத்தில் மந்தநிலையில் இருந்த வாக்குப்பதிவு பிறபகல் வாக்கில் சூடு பிடிக்க தொடங்கியது.
சில இடங்களில் பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்களால் வாக்குப்பதிவு சிறிது நேரம் தடைப்பட்டது. மாலை 5 மணியளவில் நிறைவடைந்த இன்றைய தேர்தலில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள 93 தொகுதிகளில் 14-ம் தேதி நடைபெறும் இரண்டாம்கட்ட தேர்தலுக்கு பின்னர் டிசம்பர் 18-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
873 Views
