வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சம் பேர் பயணம்- பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்!

சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சம் பேர் பயணம்- பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்!

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆண்டுதோறும் தமிழக அரசு  சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது கொரோனா பயம் காரணமாக குறைந்த அளவிலேயே பொதுமக்கள் பஸ்களில் பயணம் செய்தனர்.

இப்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மீண்டும் ஆர்வம்காட்டி வருகின்றனர். குடும்பத்தோடு உற்சாகமாக பயணம் செய்கின்றனர்.

இதனால் இந்த ஆண்டு அதிகளவு மக்கள் பஸ்களை பயன்படுத்தி வருவதால் தமிழக அரசு  பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. அதன்படி அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் உள்ள 20 ஆயிரத்து 334 பஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டு வருகின்றன.

கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கோயம்பேடு பஸ்நிலையம், மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் தாம்பரம் ‘மெப்ஸ்’ பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் கடந்த திங்கட்கிழமை முதல் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 6,300 பஸ்களுடன் 10,240 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதில் கடந்த 1-ந்தேதி சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 தினசரி பஸ்களுடன் 388 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதில் 89,932 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

நேற்று (2-ந்தேதி) 7 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து இயக்கப்படும் 2,100 வழக்கமான பஸ்களில் 1,796 பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் 1,575 சிறப்பு பஸ்களில் 501 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 107 பயணிகள் பயணம் செய்திருந்தனர்.

நேற்று இரவு 12 மணி நிலவரப்படி மொத்தம் 5,932 பஸ்களில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 918 பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதுதவிர இன்று அதிகாலை வரை 60 ஆயிரம் பயணிகள் வெளியூர் சென்றனர். மொத்தம் இதுவரை 3 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

நாளை தீபாவளி என்பதால் இன்று சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வருவார்கள் என்பதால் பஸ் நிலையங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து இன்று 2,100 பஸ்களுடன் 1,540 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

428 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன