வியாழக்கிழமை, மே 16
Shadow

Tag: TN Govt

கிராம உதவியாளர் காலியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும்- தமிழக அரசு உத்தரவு!

கிராம உதவியாளர் காலியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும்- தமிழக அரசு உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது:- ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி நிலவரப்படி, காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை பற்றிய தகவலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க கலெக்டர்கள் அந்த தகவலை அளித்துள்ளனர். இதில் 1.10.2019 தேதியில் இருந்து 30.9.2022 வரை தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் காலியிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த காலிப்பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறலும் இல்லாமல் கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்புமாறு அறிவுறுத...
தமிழக அரசு 11-ம் வகுப்பு  மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க ஏற்பாடு!

தமிழக அரசு 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இலவச சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், 2021-22-ம் கல்வியாண்டில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் அனைத்து பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் தொழிற்பயிற்சி படிக்கும் மாணவ-மாணவிகள் ஆகியோருக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த மாணவ-மாணவிகளுக்கு 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் கொள்முதல் செய்ய கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி ஒப்பந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இதனையடுத்து ஒப்பந்த புள்ளி கோரும் கூட்டத்தில் கலந்து கொண்ட தகுதியான நிறுவனங்களின் விலைப் புள்ளிகள் திறக்கப்பட்டு, கொள்முதல் குழு மூலம் விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கொள்முதல் குழுவால் விலை குறித்து முடிவு எடுக்கப்பட்டு விரைவில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் கொள...
சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி- தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி- தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி சென்னையில் 1997ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தெற்கு ஆசியாவில் நடைபெற்று வந்த ஒரே ஏ.டி.பி. போட்டி இதுவாகும். 1997 முதல் 2001 வரை கோல்டு பிளேக் ஓபன் என்ற பெயரிலும், 2002 முதல் 2004 வரை டாடன் ஓபன், 2005 முதல் 2009 வரை சென்னை ஓபன், 2010 முதல் 2017 வரை ஏர்செல் சென்னை ஓபன் என்ற பெயரிலும் இந்தப் போட்டி நடைபெற்றது. 21 ஆண்டுகள் ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 2018ம் ஆண்டு இந்த போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் முதல் முறையாக உலக மகளிர் டென்னிஸ் போட்டியை சென்னையில் இந்த ஆண்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. டபிள்யு.டி.ஏ. என அழைக்கப்படும் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறும் தேதியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அறிவித்தார். இது தொடர்பாக ச...
பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது- தமிழக அரசு!

பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது- தமிழக அரசு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாட்டில் கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரலம் 1-ம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையைக் கொண்டு அவர்களுக்கு ஓய்வூதியமும், அவர்களுக்குப் பிறகு அவர்களின் வாழ்விணையருக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படும். ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. மாறாக, அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் ஒரு பகுதி பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திரும்ப எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இது பயனற்றது என்பதால் பழைய ஓய்வூதியத்துக்கு மாற அரசு ஊழியர்களும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத...
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு!

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023-ம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021-2022-ம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும் மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கீழ்க்கண்டவாறு சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது. 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிற...
வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு தடை விதிக்க கோரி அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகர் பகுதி விளை நிலம் என்பதால் அங்கு டாஸ்மாக் கடை திறக்கப் போவதில்லை என்றும் சட்ட விதிகளின்படியே உரிய இடத்தில் அமைக்க அனுமதிக்கப்படும் என்றும் விளக்கமளித்தார். பின், இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வேளாண் நிலங்களில் டாஸ்மாக் கடைகளை அமைக்க அனுமதிக்கக்கூடாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்....
எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ. 352 கோடி ஒதுக்கீடு!

எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ. 352 கோடி ஒதுக்கீடு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ. 352 கோடி ஒதுக்கீடு! தமிழக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகையில் எம்.எல்.ஏ.-க்கள் தங்களுடைய தொகுதியில் கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவார்கள். 2021-2022 நிதியாண்டுக்கான மேம்பாட்டு நிதி இதுவரை ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்த தொகையை ஒதுக்கீடு செய்யுமாறு எதிர்க்கட்சிகள் வழியுறுத்தி வந்தன. இந்த நிலையில் 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த மொத்த தொகையில் 50 சதவீதமாகும்....
சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சம் பேர் பயணம்- பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்!

சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சம் பேர் பயணம்- பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சம் பேர் பயணம்- பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்! தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆண்டுதோறும் தமிழக அரசு  சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது கொரோனா பயம் காரணமாக குறைந்த அளவிலேயே பொதுமக்கள் பஸ்களில் பயணம் செய்தனர். இப்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மீண்டும் ஆர்வம்காட்டி வருகின்றனர். குடும்பத்தோடு உற்சாகமாக பயணம் செய்கின்றனர். இதனால் இந்த ஆண்டு அதிகளவு மக்கள் பஸ்களை பயன்படுத்தி வருவதால் தமிழக அரசு  பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. அதன்படி அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் உள்ள 20 ஆயிரத்து 334 பஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டு வருகின்றன. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கோயம்பே...
‘வருமுன் காப்போம்’ திட்டம் மீண்டும் தொடக்கம்- மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்!

‘வருமுன் காப்போம்’ திட்டம் மீண்டும் தொடக்கம்- மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
‘வருமுன் காப்போம்’ திட்டம் மீண்டும் தொடக்கம்- மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்! மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது 2006-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் பூந்தமல்லி அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்த செயல்பாடுகளும் இல்லாமல் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். அதன்படி நடந்து முடிந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மருத்துவத்துறை சார்பில் 110 அறிவிப்புகள் அறிவிக்கப்ப...
கொரோனா தடுப்பூசி முகாம்களில் ஆர்வத்துடன் திரண்ட பொதுமக்கள்- 20 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு!

கொரோனா தடுப்பூசி முகாம்களில் ஆர்வத்துடன் திரண்ட பொதுமக்கள்- 20 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா தடுப்பூசி முகாம்களில் ஆர்வத்துடன் திரண்ட பொதுமக்கள்- 20 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு! தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 35 ஆயிரத்து 146 பேர் பலியான நிலையில், கொரோனா 3-வது அலையை தவிர்ப்பதற்காக தடுப்பூசி  போடும் சிறப்பு முகாம் இன்று பெரிய அளவில் நடத்தப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளி, கல்லூரிகள், விமான நிலையம், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி  போடப்பட்டது. காலை 7 மணியில் இருந்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்பட்டன. இன்று சிறப்பு முகாம் நடைபெறுவதையொட்டி அரசு சார்பில் ஒரு வாரத்துக்கு முன்பே இதற்கான முன் ஏற்பா...