திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

ஹாலிவுட் பாணியில் ஒரு தமிழ் படம் “ஜாங்கோ” …கோடங்கி விமர்சனம்

ஹாலிவுட் பாணியில் ஒரு தமிழ் படம் “ஜாங்கோ” …கோடங்கி விமர்சனம்

வேற்றுகிரகவாசிகள், ஏலியன்கள், பறக்கும் தட்டுக்கள் கதைகளை ஹாலிவுட் படங்களாக வாய் பிளந்து பார்த்த காலம் போய் நம்மூரிலும் இப்படி படங்களை எடுக்கலாம்… இடியாப்ப சிக்கலான கதையையும் சுவாரஸ்யமாக வேகமாக தரமுடியும்… அதிலும் குறிப்பாக ஒரே காட்சிகள் எத்தனை முறை வந்தாலும் அதில் விறுவிறுப்பு குறையாமல் கொடுக்கலாம்… தமிழ் சினிமாவில் டைம் டிராவல் கதைகள் பார்த்த காலம் போய் டைம் லூப் கதைக்குள் நம்மை அடைக்க முடியும் என்பதை மிக அழகாக சுவாரஸ்யமாக கொடுத்த இயக்குனர் மனோ கார்த்திகேயனுக்கு ஒரு சபாஷ்.

ரொம்ப சிம்பிளான கதை… ஒரு டாக்டர் அவர் மனைவி ஒரு டிவி சேனல் நிருபர் இருவரின் பணிகள் காரணத்தால் இவர்கள் பிரிந்து போகிறார்கள். இதற்கிடையில் விண்ணில் இருந்து வந்த வேற்றுகிரக டிவைஸ் தந்த கதிர்வீச்சில் பாதிக்கப்படும் ஹீரோவான டாக்டர் டைம் லூப் எனப்படும் ஒரு நாள் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அப்போது தான் பிரிந்து சென்ற தன் மனைவியை கொல்ல ஒரு கும்பல் முயற்சிப்பது தெரிகிறது.
ஹீரோ மனைவியை காப்பாற்றினாரா? டைம் லூப் சிக்கலில் இருந்து விடுபட்டாரா? கொல்ல வந்தது யார்? இதற்கெல்லாம் விறுவிறுப்பாக விடை சொல்கிறது ஜாங்கோ.

அறிமுக ஹீரோ மாதிரியான எந்த பதட்டமும் இல்லாமல் தேர்ந்த நடிகராக பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார் சதீஷ்குமார்.

டிக்டாக் மிர்ணாளினி தன் பங்குக்கு ஹீரோவுக்கு இணையாக போட்டி போடுகிறார். அவரின் முந்தைய படங்களுக்கு ஜாங்கோ கை கொடுக்கும்.

கருணாகரனின் காமெடியும் ரசிக்க வைக்கிறது.

படத்தின் கதையை விட அதை சொன்ன திரைக்கதையின் பலம்தான் ரசிகர்களை கட்டிப்போடும். அந்த சூட்சமத்தில் இயக்குனர் வெற்றி பெற்று இருக்கிறார்.

ஒரே சம்பவங்கள் 17 முறை திரும்ப வந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கோணத்தில் அதை படமாக்கி இயக்குனர் மனோ சபாஷ் பெறுகிறார்.

இயக்குனர் மனோவுக்கு உயிரோட்டம் கொடுத்தது ஜிப்ரானின் பின்னணி இசை.

இது போன்ற சிக்கலான கதையை எடுக்கத் துணிந்த தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு தைரியம் அதிகம்… படம் பார்க்கிற போது செல்போன் பார்க்காமல் பார்த்தால் மட்டுமே புரியும்.
ஹாலிவுட் தரத்திற்கு நம்மூரிலும் கதைகள் தரமுடியும் என்கிறது ஜாங்கோ .

எல்லாவற்றையும் கவனித்த இயக்குனர் மனோ வசன உச்சரிப்பை கவனிக்க தவறியிருக்கிறார். பல இடங்களில் ஹீரோ ஹீரோயின் பேசுவது “சிங்க்” ஆகவே இல்லை…

ஆனாலும் ஜாங்கோ ஒரு வித்தியாசமான முயற்சி. இந்த டிவைசில் ஒரு முறை பயணம் செய்வது புது அனுபவம் தரும்!

மதிப்பீடு 3.5/5

– கோடங்கி

289 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன