புதன்கிழமை, ஜூலை 8
Shadow

மறைந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு ராகுல் காந்தி அஞ்சலி

மறைந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு ராகுல் காந்தி அஞ்சலி

தமிழகம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று முன்தினம் நடந்த ராணுவ ஹெலிகாப்டர்  விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தன.

இவர்களது உடல்கள் நேற்று விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு மத்திய அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இங்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ஆகியோருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

280 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன