
’தி ஃபேமிலி மேன் 2’ சீரிஸ்காக சிறந்த நடிகை விருது வென்ற சமந்தா
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் வெப் சீரிஸ் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சர்ச்சைக்கு மத்தியில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சமந்தாவின் நடிப்பை அனைவரும் பாராட்டினர்.பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சமந்தாவின் திறமையை சுட்டிக்காட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகை ஓடிடி என்ற ஃபிலிம் ஃபேர் விருதை வென்றுள்ளார். ஓடிடியின் வெளியாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை கவுரப்படுத்தும் வகையில் ஃபிலிம் ஃபேர் ஓடிடி விருது வழங்கப்படுகிறது.
விருதுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துக்கொண்ட சமந்தா,’என்னுடைய 5வது பிளாக் லேடி எனக்கு வாக்களித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி .இன்று என்னை மிகவும் மகிழ்ச்சியான பெண்ணாக மாற்றியுள்ளீர்கள்’ என்றுக் கூறி தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.

