செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே

பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.  அனிருத் இசையமைத்து வருகிறார். விஜய்யின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் இரு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 100 நாட்கள் படப்பிடிப்பு நிறைவை அடுத்து படக்குழுவினரின் ஸ்பெஷல் புகைப்படம் வெளியாகி மிகவும் வைரலானது.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை முடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

553 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன