வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

வித்தியாசமாக உருவாகியுள்ள சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர்

வித்தியாசமாக உருவாகியுள்ள சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர்

சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

மாநாடு படத்திற்கு பிறகு சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தில் சிம்பு உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் வித்தியாசமாக இருக்கும் சிம்புவின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் ஆவலை கூட்டியுள்ளது.

 

 

இப்படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூர் பகுதியில் ஒரு மாதம் நடைபெற்ற நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ள இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சிம்புவின்  வித்தியாசமான பரிமாணத்தில் இருக்கும் இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

261 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன