
இணையத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகள் பட்டியலில் மலையாள நடிகை காவ்யா மாதவன் இடம்பிடித்து உள்ளார். ‘யாஹூ’ வெளியிட்ட 2017 ஆம் ஆண்டுக்கான, இணையத் தளத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகளின் பத்துப் பேர் கொண்ட பட்டியலை வெளியிட் டது. அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே தென்னிந்திய நடிகை காவ்யா மட்டும்தான்.
தென்னிந்திய நடிகைகளில் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா வுக்கும் அனுஷ்காவுக்கும் கிடைக் காத ஒரு கௌரவம் காவ்யவிற்கு கிடைத்துள்ளது. அண்மைக்காலமாக அதிக அளவிலான படங்களிலோ, வெற்றிப் படங்களிலோ நடிக்காமல் இருக்கும் மலையாள நடிகை காவ்யா மாதவனை அதிகம் இணையத்தில் தேடியதற்குக் கார ணமும் கூறப்படுகிறது.

பாவனா கடத்தல், பாலியல் கொடுமை வழக்கிலும் காவ்யா மாதவன் பெயர் அதிகம் சிக்கியது. காவ்யா மாதவன் சொல்லித்தான் பாவனாவை கடத்தியதாக கைது செய்யப்பட்டவர் கூறியதாகவும் செய்திகள் வெளியானது. காவ்யா மாதவன் போலீஸ் விசாரணைக்கு பயந்து தலைமறைவானதாகவும் செய்திகள் வெளியானது. இதை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள தமிழ், மலையாள சினிமா ரசிகர்கள் பலராலும் காவ்யா மாதவன் தொடர்பான செய்திகள் இணையங்களில் தேடப்பட்டன. இதன் காரணமாகவும் இணையத்தில் அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் காவ்யா இடம்பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
