திங்கட்கிழமை, மே 20
Shadow

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது எப்படி? அமைச்சர் ஆலோசனை

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பார்வையாளர்களை அனுமதிப்பது, காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான அனுமதி மற்றும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையின் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் தமிழகர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

தற்போது தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

இந்த சூழலில், மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிகளை கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளுடன் நடத்துவது தொடர்பாக,

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் விழா கமிட்டியினர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், மாநகர காவல் துணை ஆணையர் தங்கதுரை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் போட்டிகளில் பார்வையாளர்களை அனுமதிப்பது, காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான அனுமதி மற்றும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது

 

153 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன