வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

வைரல் ஆன காமெடி ஷோவுக்கு நடவடிக்கை… மத்திய இணையமைச்சர் சொன்னதாக பாஜக அண்ணாமலை டிவீட்டால் பரபரப்பு!

 

தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் காமெடி ரியாலட்டி ஷோவில் இரண்டு சிறுவர்கள் வயிறு குலுங்க வைக்கும் காமெடி நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்கள்.

அந்த நிகழ்ச்சியின் போது அரங்கில் இருந்தவர்களும் அதை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் விழுந்து விழுந்து சிரித்ததால் அந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் இணையத்தில் வைரலானது.

அந்த காமெடி மூலம் பிரதமர் மோடியை இழிவு படுத்திவிட்டார்கள் என்றும் விரைவில் அந்த டிவி மீதும், அந்த நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீதும் நடவாடிக்கை எடுக்கப்படும்  என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு டிவிட் பதிவு போட…

அரசியல் கட்சியினர் பலரும் அந்த வீடியோவை தேடிப்பிடித்து வைரலாக்க ஆரம்பித்தனர். கூடவே பாஜகவை கடுமையாக விமர்சித்து பதிவும் போட்டனர்.

மத்திய இணை அமைச்சர் சொல்கிற படி அந்த சிறுவர்கள் நடத்திய காமெடி ஷோவில் எங்கும்பாரத பிரதமர் மோடியின் பெயர் குறிப்பிடப்படவே இல்லை என்பதுதான் ஹய்லைட்…

அரசியல் நையாண்டியை கூட தாங்கிக் கொள்ள முடியாமல் அதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்க களம் இறங்கினால் பொது வாழ்விற்கு வராமல் இருந்திருக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக பதியப்படுகிறது

501 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன