
2021 டிசம்பர் 16 வெளியான “ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்” திரைப்படம் இதுவரையான யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஸ்பைடர் மேன் சீரிஸில் கடைசியாக வந்த நோ வே ஹோம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.
படம் ஆரம்பித்தது முதல் சீரான இடைவெளியில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் வந்தபடி இருந்தன.
இதுவரை ஸ்பைடர் மேனாக நடித்தவர்கள் அனைவரும் படத்தில் இடம்பெற்றனர். அவர்களுடன் மோதிய வில்லன்களும்.
அதற்கேற்ப எழுதப்பட்ட திரைக்கதை படத்தை சுவாரஸியம் குறையாமல் காத்தது.
இந்தப் படம் உலக அளவில் இதுவரை அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது.
யுஎஸ் ஆல்டைம் பாக்ஸ் ஆபிஸில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தற்போது ஸ்டார் வார்ஸ் : எபிசோட் 7 – தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் 936.6 மில்லியன் டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது.
அவென்ஜர்ஸ் என்ட்கேம் 858.3 மில்லியன் டாலர்கள் வசூலுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அவதார் திரைப்படம் 760.5 மில்லியன் டாலர்கள் வசூலுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
“ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்” 702.5 மில்லியன் டாலர்கள் வசூலுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதையடுத்து ஐந்தாவது இடத்தில் பிளாக் பேந்தர் உள்ளது. இதன் யுஎஸ் வசூல் 700.4 மில்லியன் டாலர்கள்.
யுஎஸ்ஸில் தினம் லட்சக்கணக்கானவர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகிவரும் நிலையில், “ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்” இத்தனை அதிக வசூலை பெற்றுள்ளது பெரும் சாதனை.
சாதாரண காலகட்டத்தில் வெளியாகியிருந்தால் முதலிடத்தைப் பிடித்திருந்தாலும் ஆச்சரியமில்லை

