தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016 முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் அரசுக்கு எதிராகவும், முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றசாட்டுகள் கூறியதாக ஸ்டாலின் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
இதனிடையே கடந்த ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெற அரசாணையை தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அரசாணைகளை ஏற்று முதல்வர் ஸ்டாலின், முரசொலி செல்வம், கலைஞர் டிவி ஆசிரியர் திருமாவேலன் ஆகியோருக்கு எதிரான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன
306 Views

