ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

ஓடிடியில் வெளியாகிறதா பிக்பாஸ் வருணின் ”ஜோஷ்வா”?

 

 

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் பிக்பாஸ் வருண் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா.

இமைபோல் காக்க’ திரைப்படம், ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜோஷ்வா இமைபோல் காக்க திரைப்படம் உருவாகியுள்ளது.

இதில் வருண், கிருஷ்ணா, ராஹி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரபல பின்னணி பாடகர் கார்த்திக் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

யோகிபாபு, மன்சூர் அலிகான், விசித்திரா, திவ்ய தர்ஷினி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு முன்னரே அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் காட்சிகள், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன