ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 2
Shadow

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

 

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த டிசம்பா் 19-ம் தேதி தொடங்கி ஜனவரி 7-ம் தேதி வரை நடைபெற்றது

இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 பேரும் என மொத்தம் 40,288 போ் விண்ணப்பித்தனர்.
இதை தொடர்ந்து விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில்  எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
இதில்,  நாமக்கல்லை சேர்ந்த கீதாஞ்சலி, பிரவீன்,பிரசன் ஜித்தன் ஆகியோர் தலா 710 – மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 6,999, எம்.பி.பிஎஸ் 1,930 பிடிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
அரசு மருத்துவ கல்லூரியில் 4,349, தனியார் கல்லூரிகளில் 2,650- என மொத்தம் 6,999- எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.
www.tnmedicalselection.net, www.tnhealth.tn.go.in என்ற இணையதளத்தில் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

 

398 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன