பிரச்சினைகளை தீர்க்க வந்த ஜோதிடரின் சபல புத்தியை சாதகமாக்கி அவருக்கே பிரச்சனை கொடுத்து
49 லட்சத்தை பறித்துக் கொண்ட ஹனிடிராப் தம்பதி மோசடி.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவைச் சேர்ந்த தம்பதிகள் வீட்டில் பூஜை செய்ய வந்த பூசாரியையே
தங்கள் வலையில் விழச் செய்து பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா சனிவாரசந்தை பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது பவ்யா.
இவர் தனது இரண்டாவது கணவரான ராஜு என்கின்ற குமாருடன் சேர்ந்து பணம் பறிக்கும் மோசடிகளை அரங்கேற்றியுள்ளார்.
இரண்டாவது கணவருடன் மங்களூரில் உள்ள பதவினங்கடி என்ற பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி வசித்து வந்த பவ்யா,
வீட்டில் நிம்மதி இல்லை என்று கூறி சிக்கமகளூரு வைச் சேர்ந்த அர்ச்சகரை பூஜைகள் செய்ய அழைத்து வந்தனர்.

பூஜைகள் நடந்ததோ இல்லையோ, இவர்கள் தங்கள் மோசடி பணப்பறிப்பு திட்டம் பிரமாதமாக வேலை செய்தது.
ஏற்கனவே திட்டமிட்டபடி சபல புத்திகொண்ட பூசாரியை பவ்யா தன் வலையில் விழ வைத்தார்.
ஒரு கட்டத்தில் பூசாரியுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு,
அடிக்கடி அர்ச்சகரை தொடர்பு கொண்ட பவ்யா, வீடியோவை மூகவலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி
மிரட்டி அடிக்கடி பணம் பறித்து வந்திருக்கிறார்.
பெயர் கெட்டுவிடுமோ என்ற அச்சத்தில் 49 லட்சம் வரை பணத்தை பறி கொடுத்த அவர்,
அதன்பிறகு வேறு வழியில்லாமல், மங்களூர் புறநகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த மங்களூர் புறநகர் போலீசார் பவ்யா மற்றும்
பவ்யாவுக்கு உடந்தையாக இருந்த ராஜு என்கின்ற குமாரை கைது செய்தனர்.
இவர்கள் ஏற்கனவே பல்வேறு இடங்களில் இதுபோல் “ஹனி டிராப்”என்ற முறையில்
ஆட்களை வரவழைத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு
பின்னர் அந்த வீடியோவை வெளியிடுவோம் என்று கூறி பணம் பறித்த விவரமும் தெரிய வந்துள்ளது.


