செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 29
Shadow

சௌகார் ஜானகி, சுந்தர் பிச்சை உட்பட பத்ம விருது பெறும் தமிழர்கள்!

 

குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் – தொழில்நுட்பம்,

இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும்.

இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தாண்டு 128 பேருக்கு பத்ம விருதுக்கு தேர்வு பெற்றுள்ளதாகவும், அதில் 4 பேருக்கு பத்மவிபூஷண் விருதும்,

பத்ம பூஷண் விருதுக்கு 17 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 107 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

 

நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், பிரபா அத்ரே, ராதேஷ்யம் கேம்கா, கல்யாண் சிங் ஆகியோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

பிரபல பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் கலை சேவையை பாராட்டும் வகையில் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மோகனூரில் பிறந்து இந்தியாவின் டாப் நிறுவனமான டாடா குழுமத்தின் சிஇஓவாக உள்ள நடராஜன் சந்திரசேகரனுக்கு வர்த்தகத்தில் சிறந்து விளங்குவதற்காக பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பிறந்து உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக பணிபுரியும் சுந்தர் பிச்சைக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ் இலக்கியவாதி, கவிஞர் என பன்முகம் கொண்ட சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு இலக்கியம் பிரிவின் கீழ் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராமாலயா என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் எஸ்.தாமோதரனுக்கு சிறந்த சமூக பணிக்கான பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பழங்கால நடன வடிவமான சதிர் நடனக்கலைஞர் திருச்சியைச் சேர்ந்த ஆர்.ஆர் முத்துகண்ணமாளுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த கர்நாடக நாதஸ்வர கலைஞர் ஏ.கே.சி நடராஜனுக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் வீராச்சாமி சேஷய்யா என்பவருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன