நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்!
தமிழில் கடந்த 2017-ல் வெளியான மாநகரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகம் ஆன இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷான், ரெஜினா கசான்ட்ரா, சார்லி, ராம்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நான்கைந்து இளைஞர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் காரணமாக ஒரே புள்ளியில் அவர்கள் சந்திப்பதை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. மாநகரம் திரைப்படம் இந்தியில் மும்பைக்கர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
598 Views

