வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

அஜித் படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!

அஜித் படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் கொரோனா பரவலால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து அஜித் – எச்.வினோத் – போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை தபு தமிழில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
559 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன