வியாழக்கிழமை, அக்டோபர் 8
Shadow

பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கிண்டல் செய்கிறதா வெங்கட்பிரபுவின் பார்ட்டி..!

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பார்ட்டி’. இந்தப் படத்தில், சத்யராஜ், நாசர், ஜெய், சிவா, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், ரெஜினா, ரம்யா கிருஷ்ணன், சஞ்சிதா ஷெட்டி, கயல் சந்திரன், ஷாம், சுரேஷ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்த ‘பார்ட்டி’-யில் இணைந்துள்ளது.முதன் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரேம்ஜி நடிக்கவில்லை இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் பிரேம்ஜி.

 

இந்நிலையில் ‘பார்ட்டி’ படத்தின் டீசர்  வெளியானது இந்த டீசரில் இதில் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பை அறிவிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடிபணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பேசிய, மித்ரோன்… என்று தனது உரையை துவங்குவது போலவும், டீசரின் முடிவில் பணம் செல்லாது என்று அறிவிப்பது போலவும் அமைந்துள்ளது.

இதன் மூலம் பணமதிப்பிழப்பை நடவடிக்கையை வெங்கட் பிரபு கலாய்க்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வெங்கட் பிரபு , “பிரதமர் மோடி பணமதிப்பு நீக்கம் அறிவித்த நவம்பர் 8 ஆம் தேதிக்கும், கொடுக்கப்பட்ட கால அவகாசமான டிசம்பர் 31-க்கும் இடையே நடக்கும் கதை. குறிப்பாக டிசம்பர் 31 ஆம் தேதி பணத்தை மாற்ற என்ன மாதிரியான முயற்சி நடைபெறுகிறது என்பது பற்றிதான் சொல்லியிருக்கிறோம். இது பணமதிப்பு நீக்கம் சம்பந்தமான படம் கிடையாது.இதில் பணமதிப்பு நீக்கத்தை கிண்டல் செய்யவில்லை” என கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன