ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 23
Shadow

லீக் ஆன சமந்தா படங்கள்… அதிர்ச்சியில் இயக்குனர்..!

 

நாக சைதன்யாவை மணந்த சமந்தா திருமணம் முடிந்த சில நாட்களில் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ராம் சரணுடன் சமந்தா நடிக்கும் புதிய தெலுங்கு படம் ரங்கஸ்தலம். இப்படத்தில் பாவாடை, தாவணி அணிந்து ஏழைப்பெண் தோற்றத்தில் நடிக்கும் சமந்தா, மாடு மேய்ப்பது போலவும், வீட்டு வேலை செய்வது போலவும் சில முக்கிய ஸ்டில்கள் இணைய தளத்தில் வெளியானது. அதைக்கண்டு இயக்குனர் சுகுமார் அதிர்ச்சி அடைந்தார்.


படத்தின் கதையை வெளிப்படுத்தும் விதமாக யாரோ இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகம் அடைந்தார். பட நிறுவனம் சார்பில் சமந்தாவின் ஸ்டில்கள் வெளியிடாத நிலையில் திருட்டுத்தனமாக வெளியிடுவது யார் என்று பட குழுவினரிடம் விசாரணை நடத்தி வருகிறார். ஸ்டில்களை வெளியிடுவது யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

பட தரப்பினர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ய முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே சில ஸ்டில்கள் வெளியிடப்பட்டு சஸ்பென்ஸாக வைத்திருந்த சமந்தாவின் கெட்டப் லீக் ஆன நிலையில் படத்தின் முழு பணியையும் நிறைவு செய்துவிட்டு இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்க முடிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

461 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன