
இந்தியா முழுவதுமே மதுபானக்கடைகள், பார்களில் மட்டுமே மதுவிற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.
தற்போது மகாராஷ்டிராவில் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்பனை செய்ய மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி 100 சதுரமீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட கடைகள், உணவகங்கள்,
வாக் இன் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் பாட்டில்களை விற்பனை செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.
ஆனால் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகளில் ஒயின் பாட்டில்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு அமலில் உள்ள மாவட்டங்களிலும் மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அனுமதிபெற பிணையத் தொகையாக அரசுக்கு ரூ.5000செலுத்த வேண்டும். பழச்சாறு மூலம் தயாரிக்கப்படும் ஒயின் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
மாநில அரசின் இந்த உத்தரவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
