ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

இந்த வருஷ பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா தரலியாம்!

செய்தியின் தலைப்பை பார்த்து ஷாக் ஆக வேண்டாம்…  ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதற்கு முன் நிதி அமைச்சர் அல்வா கிண்டி அனைவருக்கும் வழங்குவது வாடிக்கை.

சென்ற ஆண்டை போலவே மத்திய பட்ஜெட் இந்த ஆண்டும் காகிதமில்லா முறையில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக அல்வா தயாரிக்கும் நிகழ்வு நடத்தப்படும்.
அந்த வகையில்  நடப்பு ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் ஜனவரி 31ம் தேதி தொடங்க உள்ளது.

 

பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தாக்கல் செய்ய இருக்கிறார்.
பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில்  அல்வா தயாரிக்கும் பணிகள் நடைபெறும்.

கொரோனா காரணமாக அல்வா தயாரிக்கும் பணி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக  நிதி அமைச்சக ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

 

 

 

500 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன