ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

நடமாடும் புலி-சிங்கத்தைப் பார்த்துக் கொண்டே சாப்பிடலாம், தூங்கலாம் சீனாவில் த்ரில் ஹோட்டல்!

 

 

காட்டுக்குள் இருக்கும் புலியைப் பார்த்துக் கொண்டே உணவருந்தாலும், தூங்கலாம், சிரித்து பேசி மகிழலாம்.

ஆனால், புலி நம்மை ஏதும் செய்யாது. குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் புலியை அடைத்து விடுகிறார்கள்.

இப்போது இது தான் லேட்டஸ்ட் ட்ரெண்டாகிறது.

உலகம் முழுவதும் உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புக்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நாந்தோங் வன பூங்கா அருகில் அமைந்துள்ளது புலி காப்பகம்.

அதனை அடுத்துள்ள சீன விடுதி தமது வாடிக்கையாளர்கள், விருந்தினர்களுக்காக சிறப்பு அறைகளை உருவாக்கியுள்ளது.

 

அதில் குறிப்பாக  புலி கூண்டுகளை  விருந்தினர்களின் அறைகளுக்குள்  வைத்து அதை “மிருக அறைகள்” என  விளம்பரப்படுத்தியது.

இந்த விளம்பரம்  கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இருந்த போதிலும் இந்த ஏற்பாட்டிற்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது.

இதனால் வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குண்டு துளைக்காத கண்ணாடியைப் பயன்படுத்தியுள்ளனர்.

 

சீனாவில் உள்ளூர் செய்தி சேனலில் அந்த  அறையின் வீடியோ வெளியானது. இந்த அறைகள் குறித்து பொதுமக்களிடயே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் ஃபாரஸ்ட் சஃபாரி பூங்காவில்  புலி கருப்பொருள் உணவகத்திலேயே புலிகளைப் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

நம்மூராக இருந்தால் இன்னேரம் மிருகவதைன்னு சொல்லி அந்த ஹோட்டல் திறந்தவர்களை கூண்டில் அடைத்து… அதாங்க சிறையில் அடைத்து… அந்த விலங்குகளை காட்டில் விட்டிருப்பார்கள்.

277 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன