ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

தடுப்பூசிக்கு எதிராக நூற்றுக்கணக்கான வாகனங்கள் முற்றுகை – ரகசிய இடத்தில் தஞ்சமடைந்த பிரதமர்

 

அமெரிக்கா- கனடா எல்லையை கடக்கும் லாரிகளின் ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தலைமையிலான அரசு அறிவித்தது.

இந்த கடுப்பாடுகள் ட்ரக் ஓட்டுநர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது

 

கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.

நூற்றுக்கணக்கான ட்ரக்குகள் தலைநகர் ஒட்டாவாவில் நுழைந்துள்ளது.

இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் ரகசிய இடத்தில் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், கனடாவில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

கனடாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே விமானம், ரயில் மற்றும் கப்பல்களில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவர் தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்களுக்கு உடற்பயிற்சி கூடங்கள், மதுபான விடுதிகள், இரவு விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றிற்கு செல்ல தடை விதிக்கப்படும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்தது.

 

இம்மாதத்தின் தொடக்கத்தில், அமெரிக்கா- கனடா எல்லையை கடக்கும் லாரிகளின் ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தலைமையிலான அரசு அறிவித்தது.

தடுப்பூசி செலுத்தாத ட்ரக் ஓட்டுநர்கள், எல்லையை கடந்த பின்னர் ஒரு வார காலத்திற்கு தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது

அரசின் இந்த கடுப்பாடுகள் ட்ரக் ஓட்டுநர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. அரசின் உத்தரவை கண்டித்து நாடு முழுவது ட்ரக் ஓட்டுநர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.  இதன் ஒருபகுதியாக பெரிய பெரிய ட்ரக் வாகனங்கள் தலைநகர் ஒட்டாவாவில் நுழைந்துள்ளன.

இதனால் ஏற்பாட்டுள்ள பாதுகாப்பு அச்சங்கள் காரணமாக பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் ரகசிய இடத்தில் தலைமறைவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

450 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன