ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 23
Shadow

மே 19–ந்தேதி இங்கிலாந்து இளவரசர் ஹாரி–மேகன் மார்க்லே காதல் திருமணம்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி (வயது 33), அமெரிக்க நடிகை மேகன் மார்க்லேவை காதலித்து வருகிறார். இவர்களுக்கு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதைத்தொடர்ந்து அவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் என இங்கிலாந்து அரச குடும்பம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது இளவரசர் திருமணத்துக்கான தேதி வெளியிடப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு மே 19–ந்தேதி இவர்களது திருமணம் நடைபெறும் என கென்சிங்டன் அரண்மனை நேற்று அறிவித்தது. வின்ட்சரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இளவரசர் ஹாரியின் திருமணம் நடைபெறுவதாக அரண்மனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த நடிகை மேகன் மார்க்லே, இளவரசர் ஹாரியை திருமணம் செய்த பின் இங்கிலாந்து குடிமகளாக மாறுகிறார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் பட்டத்துக்கான வரிசையில் ஹாரி, 5–வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

462 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன