
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடனமாடும் போக்குவரத்து காவலர் ராமிரோ ஹினோஜாஸ் கிறிஸ்துமஸ் சீசனை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்துள்ளார். நடனமாடியபடியே அவர் மணிலாவின் முக்கிய சாலை ஒன்றில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறார்.
போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் கடுமையான பணியை ஏன் நடனமாடியபடியே செய்யக்கூடாது என்று எண்ணிய அவர், பணியில் சேர்ந்த இரண்டாம் ஆண்டில் இருந்தே நடனமாடும் காவலராக புகழ் பெற்றுவிட்டார்.என்னதான் நடுரோட்டில் நடனமாடினாலும், தன் கைகள் வாகனங்கள் செல்ல வேண்டிய திசை நோக்கியே இருக்கும் என்கிறார் இந்த நடனமாடும் சாண்டா கிளாஸ்!
754 Views
